அருப்புக்கோட்டை, அக்.10: அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மண்புழு உரம் தயாரித்தல் குறித்த 26 நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியானது தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில், வெற்றி நிச்சயம் என்ற பிரிவில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. நேற்று தொடங்கிய பயிற்சி முகாம் நவம்பர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ளும் 25 நபர்களுக்கும் மதியம் உணவு, தேநீர் போன்றவை இலவசமாக வழங்கப்படும். கலந்து கொள்ளும் நபர்களின் வயது 35க்குள் இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், கோவிலாங்குளம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாக 9442325720 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். முதலில் வரும் 25 நபர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும் என்று திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ் தெரிவித்துள்ளார்.
+
Advertisement