சிவகாசி, அக்.10: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மாணவி அகில இந்திய குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில் உயிரிதொழில்நுட்பவியல் துறையின் முதலாமாண்டு மாணவி தேஜா முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று அகில இந்திய குத்துச் சண்டை போட்டிக்கு தேர்வாகி உள்ளார். இளங்கலை தமிழ் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவி மணிமாலா 2ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்று இருவரும் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். குத்துச் சண்டையில் வெற்றி பெற்ற வீராங்கனைகளை கல்லூரிச் செயலாளர் ஏ.பா.செல்வராஜன், இணைச் செயலாளர் ராஜேஷ் மற்றும் கல்லூரி முதல்வர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்தினர்.
+
Advertisement