ராஜபாளையம் அக்.9: ராஜபாளையத்தில் வேன்- ஆட்டோ மோதிய விபத்தில் பலி 2 ஆக அதிகரித்துள்ளது. ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் அரிசி பாரம் ஏற்றிச் சென்ற வேன், ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ ஓட்டுநர் ஐயப்பன் நிகழ்விடத்தில் உயிரிழந்தார். ஆட்டோவில் வந்த மாணவன் மகாவீர் மெய்யர்(14), மணிவாசகம் (62), இவரது மனைவி தொந்தியம்மாள்(46), வேன் ஓட்டுநர் மாரிமுத்து(43) படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். நேற்று பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தொந்தியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கௌதம் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
+
Advertisement