சிவகாசி, அக்.7: சிவகாசி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் சுடுகாடு பகுதியில் திருத்தங்கல் எஸ்ஐ அருண்பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகில் கஞ்சா விற்பனை செய்த சிறுவர்பூங்கா தெருவை சேர்ந்த சுரேஷ்லிங்கம் (25) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்
தனர்.