சிவகாசி, டிச.4: சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி முத்தையா. இவருக்கும் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் முத்தையாவும் அந்த சிறுமியும் அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சிறுமி தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலர் மணி மாலா சிறுமியின் திருமணம் குறித்து சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் முத்தையா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

