சிவகாசி, அக்.28: சிவகாசி அருகே பன்றியை திருடிச் செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி அருகே நாரணாபுரம் ரோடு முருகன் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன்(32). இவர் மாடு, பன்றிகளை வளர்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் சாமி கும்பிட குலசேகரபட்டினத்துக்கு சென்றுள்ளார். வீடு திரும்பிய போது வீட்டில் கட்டி வைத்திருந்த கன்று குட்டியை காணவில்லை. இது குறித்து அவர் விசாரித்து வந்தார். இதற்கிடையில் வீட்டின் பின்புறம் பன்றி கத்தும் சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு பாலமுருகன் சென்ற போது பன்றியை ஒருவர் தூக்கி சென்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை மடக்கி பிடித்த பாலமுருகன் சிவகாசி கிழக்கு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அந்த நபரிடம் விசாரித்த போது அவர் போஸ் காலனியை சேர்ந்த ராஜ்குமார் (43) என தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவர் கடத்த முயன்ற ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பன்றியை மீட்டனர்.
