சிவகாசி, அக்.28: சிவகாசி அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை
போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் திருத்தங்கல் எஸ்ஐ பாண்டியராஜன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள சுடுகாட்டில் பணம் வைத்து சூதாடிய முனீஸ்வரன்(42), அழகர்(36), நாகராஜ்(35), சுப்புராஜ்(48), மாரியப்பன்(46), கார்த்திக்(33), பிரகாஷ்(42) ஆகியோரை கைது செய்தனர். சீட்டு விளையாட பயன்படுத்திய சீட்டு கட்டுக்கள் மற்றும் ரொக்க பணம் ரூ.500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
