சிவகாசி, ஜூலை 8: சிவகாசி அருகே தொழுவத்தில் கட்டியிருந்த பசு மாடுகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி அருகே கங்காகுளத்தை சேர்ந்தவர் குருசாமி(73). விவசாய தொழில் செய்து வருகின்றார். இவர் தனது தொழுவத்தில் 8 பசுமாடுகளை வளர்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொழுவதில் கட்டி வைத்திருந்த 4 பசு மாடுகள் மாயமானது. மாயமான மாடுகளின் மதிப்பு ரூ.40 ஆயிரம் என கூறுப்படுகிறது.
குருசாமி தனது மாடுகளை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் மாடுகள் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் சிலர் சம்பவத்தன்று சரக்கு வாகனத்துடன் மாட்டு தொழுவத்தின் அருகில் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்கள் தான் மாடுகளை திருடி சென்று இருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.