ராஜபாளையம், நவ. 28: ராஜபாளையம் தொகுதியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்கப்பாண்டியன் எம்எல்ஏ தங்க மோதிரம் அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், துணை சேர்மன் கல்பனா குழந்தைவேலு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாசாறை ஆனந்த் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்.
+
Advertisement

