சிவகாசி, ஆக.12: சிவகாசி அருகே விளாம்பட்டியை சேர்ந்தவர் முனியான்டி மகன் லட்சுமணன்(23). இவர் ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து தனது டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சிவகாசி -வெம்பக்கோட்டை ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறி டிரான்ஸ்பார்மரில் மோதி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த லட்சுமணன் பரிதாபமாக இறந்தார்.
+
Advertisement