சிவகாசி, ஆக.4: சிவகாசி அருகே சாணார்பட்டி பகுதியில் எம்.புதுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் முதியவர் ஒருவர் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து அவரிடம் இருந்த 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் முதியவர் சுக்கிரவார்பட்டியை சேர்ந்த ராஜாங்கம் (56) என்பவரை கைது செய்தனர்.
+