விருதுநகர், செப்.2: விருதுநகரில் பெட்ரோலை குடித்து தற்கொலைக்கு முயன்றவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே நாட்டார் மங்கலத்தைச் சேர்ந்தவர் இருளப்பசாமி (43). இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க நேற்று முன்தினம் மதியம் இருப்பள்ளசாமி வந்தார்.
அப்போது, அலுவலகத்திற்கு முன்பு தான் மறைத்து கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் தடுத்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.