வில்லிபுத்தூர், செப்.2: வில்லிபுத்தூர் சிஎஸ்ஐ தூய தோமா தேவாலயத்தில் சிறுவர் ஞாயிறு ஆராதனை நடைபெற்றது. இதற்கு சபை குரு பால்தினகரன் தலைமை தாங்கினார். ஞாயிறு பள்ளி ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி பால்ராஜ் வரவேற்றார். சாமுவேல் ஜெபஸ் பாவ அறிக்கை ஜெபம் மற்றும் ஸ்தோத்திர ஜெபத்தை வழி நடத்தினார். திருமறையில் இருந்து வேத பாடங்களை ஜென்சி தாமரி, ஜெசிந்தா பார்ட்டூன், ஹர்ஷித், கேதரின் ஜெனித் ஆகியோர் வாசித்தனர்.
ஞாயிறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பு பாடல்களை பாடினார். ஆசிரியை ரெஜினா சிறப்பு தேவசெய்தி அளித்தார். சபை ஊழியர் ரூபன் ஆராதனையை வழி நடத்தினார்.இதில் ஏராளமான திருச்சபை மக்கள் மற்றும் ஞாயிறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குருசேகரக்குழு செயலர் ஜெகன், பொருளாளர் அப்பன் ராஜ், ஜவகர் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தார்கள்