விழுப்புரம், ஜூலை 31: விழுப்புரம் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து ஓட்டல் மேலாளரிடம் ரூ.50,000 பணத்தை அபேஸ் செய்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் சிக்னல் பகுதியில் பிரபல ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் பரசுராமன்(49). இவர் நேற்று ஓட்டல் ஊழியர் குப்புசாமியிடம் தன்னுடைய ஏடிஎம் கார்டை கொடுத்து அருகிலுள்ள ஏடிஎம்மிற்கு சென்று ரூ.5000 பணம் எடுத்து வருமாறு கூறியுள்ளார். அதன்படி குப்புசாமி ஏடிஎம்கார்டுடன் சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் அங்கிருந்த சுமார் 40 வயது மதிக்கதக்க வாலிபரிடம் பணம் எடுத்து கொடுக்குமாறு அவரிடம் கார்டை கொடுத்துள்ளார். அப்போது பின்நம்பரை கேட்ட அந்த நபர் இந்த கார்டில் பணம் இல்லை என்று கூறி தன் வைத்திருந்த மற்றொரு ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார். பின்னர் அவர் சென்றதும் பரசுராமன் ஏடிஎம்கார்டை பயன்படுத்தி ரூ.50,000 பணத்தை எடுத்துள்ளார். குப்புசாமிக்கு உதவுவதுபோல் ஏமாற்றி பரசுராமன் வங்கிகணக்கிலிருந்த பணத்தை அபேஸ் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement