சங்கராபுரம், அக். 30: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வடமாமாந்தூர் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அலோசியஸ் அன்பு தேவா மனைவி ஆண்டோ ஆரோக்கிய சகாயராணி (22). இவருக்கு திருமணமாகி 4 மாதங்கள் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று விவசாய நிலத்திற்கு அடிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மேல் சிறுவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிவன்யா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் முருகன் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
