கடலூர், நவ. 27: கடலூர் அருகே தோட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காசிநாதன் மகன் சுதிர்(25). சம்பவத்தன்று இவர் கோண்டூர் பஸ் ஸ்டாப் அருகில் பைக்கில் வந்தபோது, அந்த பகுதியைச் சேர்ந்த 2 பேர் அவரை வழிமறித்து, நீ யாருடா, ஊருக்கு புதுசா இருக்கிறாய் எனக் கேட்டதாகவும், நீங்கள் ஏன் கேட்கிறீர்கள் என்று சுதிர் கேட்டதற்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது, அந்த 2 பேரும் சேர்ந்து தன்னை திட்டி தாக்கியதாக, சுதிர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

