திருபுவனை, அக். 26: மதகடிப்பட்டு ஆண்டியார்பாளையம் சாலையில், அவ்வழியே சென்ற பொதுமக்களை 3 வாலிபர்கள் ஆபாசமான வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த தகவலின்பேரில், திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சென்று, அந்த நபர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியை சேர்ந்த கதிர்வேல் (21 ), சூர்யா (24), கோபாலகிருஷ்ணன் (24) என தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
+
Advertisement

