கள்ளக்குறிச்சி, அக். 26: கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளம்பார் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி மஞ்சுளா(28). கணவன், மனைவி இருவருக்கும் கடந்த ஒரு வருடமாக பிரச்னை இருந்து வருவதாக கூறபடுகிறது. இதையடுத்து விவாகரத்து சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜயகுமார் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், கடந்த 18ம் தேதி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. உறவினர்கள் விஜயகுமாரை மீட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி தகவல் அறிந்த மஞ்சுளா, தனது கணவரை பார்த்து நலம் விசாரிக்க சென்றுள்ளார். அப்போது விளம்பார் கிராமத்தை சேர்ந்த விஜயகுமாரின் உறவினர்கள் லட்சுமி, ரவிக்குமார், வெண்ணிலா ஆகிய 3 பேரும் தடுத்து நிறுத்தி திட்டி தாக்கியதாக கள்ளக்குறிச்சி போலீசில் மஞ்சுளா புகார் அளித்தார். புகாரின்பேரில் லட்சுமி உள்பட 3 பேர் மீது சிறப்பு உதவி ஆய்வாளர் மயில்வாகனன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

