கள்ளக்குறிச்சி, செப். 25: கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ராஜாராம் மகள் அறிவுச்செல்வி என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 2021ம் ஆண்டு நீதிமன்றத்தில் பண மோசடி செய்ததாக அறிவுச்செல்வி, அவரது தம்பி திண்டிவனத்தை சேர்ந்த வரதராஜன் ஆகிய இருவரை விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களை ஜாமீனில் எடுக்க கள்ளக்குறிச்சி சீத்தாராம் நகர் பகுதியை சேர்ந்த நடேசன் மகன் உதயன் ஆதித்தன் என்பவர் தான் வழக்கறிஞர் என கூறி வரதராஜன் மனைவி சரண்யாவிடம் ரூ.8 லட்சத்து 71 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டார். ஆனால் ஜாமீனில் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் உறவினர் ஒருவர் மூலமாக ஜாமீனில் வந்த வரதராஜன் உதயன் ஆதித்தனிடம் ஏன் ஜாமீன் எடுக்கவில்லை என்று கூறி கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். இதில் ரூ.1.50 லட்சம் கொடுத்துவிட்டு மீதி ரூ.7.21 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து வரதராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனையடுத்து நீதிமன்றம் உத்தரவின்படி உதயன்ஆதித்தன் மீது ் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement