பண்ருட்டி. அக். 24: பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டை மேட்டமேடு பஸ் ஸ்டாப் அருகே புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏபி குப்பம் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த அருள் முருகன் (42) என்பவர் திருட்டுத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 7 பிராந்தி பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

