புதுச்சேரி, செப். 24: புதுச்சேரியில் பொது இடங்களில் பேனர், கட்அவுட் தடை சட்டம் அமலில் உள்ளது. ஆனால் அதை பலரும் கடைபிடிப்பது இல்லை. புதுச்சேரி முழுவதும் பேனர் கலாச்சாரம் மீண்டும் தலையெடுத்துள்ளது. சாலைகளில் அதுவும் பதிதாக போடப்பட்ட சாலைகளை சேதப்படுத்தும் வகையில் கொடி கம்பங்களை நடும் செயலும் நடக்கிறது.இந்நிலையில் முத்தியால்பேட்டையில் மணிக்கூண்டு தெரியாத அளவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் பேனர்கள் வைத்துள்ளனர். அதேபோல், பெருமாள் கோயில் வீதி- முத்தையா முதலியார் வீதி சந்திப்பிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி உதவி பொறியாளர் பழனிராஜா, முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement