கடலூர், செப். 24: கடலூர் கண்ணாரப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(48). இவரது மனைவி சசிகலா(38). கடந்த மாதம் சசிகலா சென்னைக்கு கூலி வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பிறகு வெகு நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து ரமேஷ், கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகலாவை தேடி வருகின்றனர். கடலூர் நொச்சிகாடு நந்தன் நகரைச் சேர்ந்தவர் குப்புசாமி (48). இவரது மனைவி பஞ்சமாதேவி (38). சம்பவத்தன்று பஞ்சமாதேவி வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளார். பின்னர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த குப்புசாமி பல இடங்களில் தேடி உள்ளார். எங்கும் கிடைக்காததால் இது குறித்து கடலூர் துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பஞ்சமாதேவியை தேடி வருகின்றனர்.
+
Advertisement