புதுச்சேரி, செப். 24: புதுச்சேரியில் குப்பை சேகரிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதாகவும், பணிபாதுகாப்பு இல்லை எனவும், வடமாநிலத்தினரை குறைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்துவதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை மரப்பாலம் சந்திப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டனர். அவர்கள் அங்கு சாலை மறியல் செய்ய திட்டமிட்டதாக தெரிகிறது. தகவலறிந்த தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள், அங்கு வந்து சமாதானம் செய்தனர். அதன்பேரில் போராட்டம் நடத்தாமல், அங்கிருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
+
Advertisement