கடலூர், செப். 23: கடலூரில் தடுப்பணையில் மீன்கள் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கெடிலம் ஆற்றில் நீர் வரத்து உள்ளது. இந்நிலையில் கடலூர் கம்பியம்பேட்டை பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் நேற்று காலை மீன்கள் இறந்து மிதந்தன. கடந்த சில நாட்களாக கெடிலம் ஆறு வறண்டு கிடந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறிய கழிவுநீர் ஆற்றில் கலந்ததால் நீர் மாசுபாடு அடைந்து மீன்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
+
Advertisement