புவனகிரி, ஆக. 22: பரங்கிப்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது பெண். இவர் தனது கணவருடன் பு.முட்லூர் கிராமத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். அப்போது புவனகிரி அருகே உள்ள வடதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல்(19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் சுந்தரவேல் அந்தப் பெண்ணிடம் நீ என்னுடன் இருக்கும் புகைப்படம் உள்ளது. நீ என்னுடன் வரவில்லை என்றால் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து அப்பெண் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சுந்தரவேல் மீது போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement