மேல்மலையனூர், ஆக.22: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளி மாவட்டத்தில் இருந்து கள்ளத்தனமாக மணல் விற்பனை நடைபெற்று வருவதாக புகார்கள் வந்த்ன. இந்நிலையில் எய்யில் கிராம ஏரிக்கரை பகுதியில் மணல் கடத்தல் லாரி வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் அதிகாலையில் லாரியை மடக்கி பரிசோதனை செய்தனர். இதில் அரசு அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட மணல் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் பகுதி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த கடத்தல் லாரியின் உரிமையாளர் சோம்பு (58) மற்றும் ஓட்டுநர் ஏழுமலை (50) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
+
Advertisement