புவனகிரி, ஆக. 20: சீர்காழி தாலுகா அல்லிவிளாகம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வமணி (50). இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடன் தொல்லை அதிகமானதால் சம்பவத்தன்று புவனகிரி அருகே கீரப்பாளையத்தில் உள்ள அக்கா வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அங்கு கலைக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். உறவினர்கள் மீட்டு சிதம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
+
Advertisement


