உளுந்தூர்பேட்டை, செப். 19: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம். குண்ணத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் வேலாயுதம் மகன் பாஸ்கரன் (20). இவர் விருத்தாசலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று இந்த கிராமத்தில் இருந்து சென்ற அரசு பேருந்தில் பாஸ்கரன் சென்று கொண்டிருந்தபோது பிள்ளையார் குப்பம் அருகில் அரசு பேருந்தை வழிமறித்த அதே கிராமத்தை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் பேருந்தில் சென்ற மாணவர்களை குச்சியால் தாக்கி திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து திருநாவலூர் காவல் நிலையத்தில் பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சோமசுந்தரம் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்.
+
Advertisement