வடலூர், செப். 19: வடலூர் அருகே மேல கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் மனைவி குணசுந்தரி(38). இவர் நேற்று இரவு சுமார் 7:15 மணி அளவில் வடலூரில் இருந்து ஊருக்கு செல்வதற்காக வடலூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள மருந்தகம் அருகில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது மகன் அங்கு வந்த போது அவரிடம் பேசிக்கொண்டே கையில் இருந்த மஞ்சள் கலர் துணிப்பையை கீழே வைத்துள்ளார். பின்னர் பேசிவிட்டு திரும்பி பார்த்தபோது அந்தப் பை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் ரூ.11 ஆயிரம், அரை கிராம் தோடு, வெள்ளி அரை நாண் கயிறு ஆகியவை இருந்துள்ளது. இது குறித்து வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement