ரெட்டிச்சாவடி, நவ. 18: ரெட்டிச்சாவடி அடுத்த பெரிய காட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் விமல் (24). சம்பவத்தன்று பெரிய காட்டு பாளையம் அய்யனார் வீடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது முன்பகை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (20), முகேஷ் (20), அஜிந்திரன் (19) மற்றும் விஷால் (20) ஆகியோர் குடிபோதையில் விமலை அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் விமல் தரப்பினரும், செல்வக்குமார் தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் விமல், அஜேந்திரன் ஆகியோர் காயம் அடைந்தனர். பின்னர் இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து விமல் கொடுத்த புகாரின்பேரில் செல்வகுமார் உள்பட 4 பேர் மீதும், அஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் விமல் உள்பட 3 பேர் என மொத்தம் 7 பேர் மீது ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோதலில் ஈடுபட்ட செல்வகுமார் முகேஷ் மற்றும் விஷால் ஆகியோரை ரெட்டிச்சாவடி போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
+
Advertisement


