மயிலம், அக். 16: திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி டாஸ்மாக் மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி நேற்று சென்றது. மயிலம் அடுத்துள்ள கூட்டேரிப்பட்டு மேம்பாலத்தில் சென்றபோது சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற வேன் ஒன்று லாரியின் பின்புறத்தில் திடீரென அதிவேகமாக மோதியதில் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் வேன் ஓட்டுநர் அரியலூர் மாவட்டம், எடையாறு, உத்திராபதி மகன் தமிழரசன் என்பவர் கால் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலம் போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement