சின்னசேலம், செப். 15: சின்னசேலம் காவல் சரகம், கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புக்கிரவாரி கிராம பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக கீழ்குப்பம் காவல் நிலைய போலீசாருக்கு நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கீழ்குப்பம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் அந்த கிராமத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது புக்கிரவாரி நடுத்தெரு பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் இருந்து 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அதே ஊரைச் சேர்ந்த பாண்டித்துரை(25) மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் புக்கிரவாரி ஏரிக்கரை அருகே மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் சென்று பாண்டித்துரையை பிடித்து விசாரித்ததில் அவரிடமிருந்து 17 மதுபாட்டில்கள், ரூ.600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் முட்புதரில் 80 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் பாண்டித்துரை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.