சின்னசேலம், செப். 14: சின்னசேலம் அருகே மூங்கில்பாடி சாலை வடக்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் மனைவி சொப்னா(40). சம்பவத்தன்று இவர் கல்லாநத்தம் கிராமத்தில் நடந்த மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். மேலும் கோயில் திருவிழாவில் ஊர்வலமாக சென்றபோது சொப்னா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் அறுந்து கொண்டு கீழே விழுந்துள்ளது. கோயில் ஊர்வலத்தில் சிறிது தூரம் சென்ற சொப்னா கழுத்தில் அணிந்திருந்த செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து நடந்து வந்த பாதையில் தேடியும் செயின் கிடைக்கவில்லை. அதன் மதிப்பு ரூ.1,20,000 இருக்கும் என தெரிகிறது. இது குறித்து சொப்னா சின்னசேலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement