விழுப்புரம், செப். 14: விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் பின்புறம் பூந்தோட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆதிவாலீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் உள்ள அம்மன் கோயில் முன்புறம் சிறிய அளவிலான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை வழக்கம் போல் பூசாரி கோயில் திறந்து பூஜை செய்ய சென்றபோது அம்மன் கோயில் முன்புள்ள உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.
+
Advertisement