உளுந்தூர்பேட்டை, டிச. 11: உளுந்தூர்பேட்டை அருகே பைக்கில் நாட்டு துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குலாம் உசேன் தக்கா கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை விசாரணைக்காக போலீசார் நிறுத்த முயன்றபோது, பைக்கில் அனுமதி இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அப்போது பைக்கில் வந்தவர் போலீசாரை பார்த்தவுடன் பைக்கையைும், நாட்டு துப்பாக்கியையும் அப்படியே போட்டுவிட்டு, அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து நாட்டு துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
+
Advertisement


