பண்ருட்டி, நவ. 11: பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை சுண்ணாம்பு கார தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் ராஜராஜன் (31). இவர் பண்ருட்டி யூனியன் அலுவலகம் அருகில் உள்ள ஹோட்டல் அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த விஜி என்கிற விஜயகுமார் (56) மது வாங்கி கொடு என்று கேட்டுள்ளார். அதற்கு என்னிடம் பணம் இல்லை என்று ராஜராஜன் கூறியுள்ளார். விஜி அதை கேட்காமல் மீண்டும் மீண்டும் சரக்கு வாங்கி கொடு என சொல்லி தொந்தரவு செய்துள்ளார். பணம் இல்லை என்று சொன்னதால் விஜி, ராஜராஜனை திட்டி அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து பண்ருட்டி போலீசில் ராஜராஜன் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
+
Advertisement

