தியாகதுருகம்,அக்.11: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கூத்தக்குடி கிராமத்தில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை நடைபெற்று வருவதாக வரஞ்சரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கூத்தக்குடி கிராமத்தில் சோதனை செய்ததில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்த விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மகன் அய்யாக்கண்ணு (57), அவரது மனைவி காந்தி (45), அய்யாக்கண்ணு மகன் சுரேஷ் (35) ஆகிய மூன்று பேரும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும், வேப்பூர் பகுதியில் இருந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வேப்பூர் டாஸ்மாக் விற்பனையாளர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement