சிதம்பரம், அக். 11: சிதம்பரம் அருகே சீர்காழி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி மகன் முகில்வேந்தன் (23), இவர் சிதம்பரம் அருகே எண்ணாநகரம் பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பலமுறை நெருக்கமாக இருந்துள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். அதனைத் தொடர்ந்து சென்னை தாம்பரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் பெண்ணை அழைத்து சென்று கருவை முகில்வேந்தன் கலைத்துள்ளார். இந்நிலையில் முகவேந்தனை அந்த பெண் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த முகில்வேந்தன் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து மிரட்டி உள்ளார். இதுகுறித்து பெண் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முகில்வேந்தனை கைது செய்தனர்.
+
Advertisement