வானூர், அக். 10: இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்தவர் சங்கராபரணன் (58). இவர் கடந்த 1990ம் ஆண்டு இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகப்பகுதிக்கு அகதியாக தப்பித்து வந்துள்ளார். பல்வேறு இடங்களில் வசித்து வந்த இவர், வேலையும் செய்து வந்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச நகரமான ஆரோவில் தன்னார்வலராக சேர்ந்த அவர், ஆரோவில் வாசியாகவும் மாறி, அங்கு பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே இலங்கையில் இருந்து படகு மூலம் வந்த அவரை பல மாதங்களாக சென்னை (எப்ஆர்ஆர்ஓ.,) வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலக அதிகாரிகள் தேடி வந்தனர். இந்நிலையில் ஆரோவில் பகுதியில் சங்கராபரணன் வசித்து வருவதாக சென்னை எப்.ஆர்.ஆர்.ஓ., அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆரோவில் போலீசாரின் உதவியோடு நேற்று முன்தினம் அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கடந்த 1990ம் ஆண்டு கப்பல் மூலம் தப்பித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை திருச்சி சிறப்பு முகாமில் போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.
+
Advertisement