வடலூர், அக். 10: வடலூர் அருகே தென்குத்து பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக வடலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எஸ்ஐ ராஜராஜன் மற்றும் போலீசார் சென்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தென்குத்து பகுதியை கருணாமூர்த்தி(27), சம்மனசு மேரி(63) ஆகியோர் கள்ளத்தனமாக மது பாட்டில்களை வீட்டின் பின்புறம் வைத்து விற்பனையில் ஈடுபட்ட போது பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 21 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement