ஆன்லைன் பங்கு சந்தையில் லாபம் எனக்கூறி தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.56 லட்சம் மோசடி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
புதுச்சேரி, டிச. 9: புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் பிரேம்நாத் (50). இவர், புதுவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரை மர்ம நபர்கள் வாட்ஸ் அப் மூலம் தொடர்புகொண்டு ஆன்லைன் பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளனர். தொடர்ந்து, மர்ம நபர் அனுப்பிய லிங்கில், பிரேம்நாத் பல்வேறு தவணைகளில் ரூ.56.19 லட்சத்தை பங்குசந்தையில் முதலீடு செய்துள்ளார். அதில், அவருக்கு அதிக லாபம் கிடைத்து இருப்பதாக காட்டியுள்ளார். இதையடுத்து பிரேம்நாத் கிடைத்த லாபத்தை எடுக்க முயன்றபோது அவரால் எடுக்க முடியவில்லை. இதுகுறித்து பிரேம்நாத், மர்ம நபரிடம் கேட்டபோது, கூடுதலாக பணம் கட்ட வேண்டும் எனக்கூறியுள்ளார். இதையடுத்து பிரேம்நாத் மோசடி கும்பலிடம் ஏமாந்ததை உணர்ந்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து பிரேம்நாத் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


