விழுப்புரம், அக். 9: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார்(27). இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. குழந்தை இல்லை. கூலி வேலை செய்து வரும் அசோக்குமார் மதுவுக்கு அடிமையானதால் கடந்த 5ம் தேதி விழுப்புரம் அருகே ராமையன்பாளையத்தில் உள்ள போதை மறுவாழ்வு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்ட அசோக்குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அங்கிருந்த பணியாளர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அசோக்குமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வளவனூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement