சின்னசேலம், அக். 9: கச்சிராயபாளையம் அருகே ஊத்தோடை காடு பகுதியில் குடியிருந்து வருபவர் சுரேஷ்(41). இவருடைய மகள் கச்சிராயபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 7ந்தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சுரேஷின் தந்தை பொன்னுசாமி செல்போனை காணவில்லை என்று பேத்தியிடம் கேட்க கச்சிராயபாளையம் வந்துள்ளார். அப்போது பேத்தி பள்ளிக்கு செல்லாமல் கச்சிராயபாளையம் பேங்க் ஸ்டாப் அருகில் நின்றதை பார்த்து கேட்டுள்ளார். அவர் தோழி மண்மலையை சேர்ந்த மாணவியுடன் புட்பால் விளையாட கள்ளக்குறிச்சி செல்கிறோம் என்று கூறி சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து புகாரின்பேரில் கச்சிராயபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னைக்கு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விரைந்துள்ளனர்.
+
Advertisement