கள்ளக்குறிச்சி, ஆக. 9: கள்ளக்குறிச்சி அருகில் உள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி மனைவி ராணி(65). இவர் தனது வீட்டின் பின்புறம்ஆட்டுபட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கமாக நேற்று முன்தினம் வளர்ப்பு ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று பின்னர் மாலை ஆட்டுப்பட்டியில் அடைத்துள்ளனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆடுகள் சத்தம் போட்டுள்ளது. உடனடியாக ராணி குடும்பத்தினர் ஆட்டுபட்டிக்கு சென்று பார்த்தபோது தெருநாய்கள் ஆடுகளை கடித்து கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதில் தெரு நாய்கள் கடித்ததில் மூன்று ஆடுகள் இறந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த நிலையில் இருந்த 2 ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்துள்ளனர். ஆட்டுப்பட்டியில் கட்டிவைத்திருந்த ஆடுகளை தெரு நாய்கள் கடித்த விவகாரம் ஆடு வளர்ப்போர் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய் கடித்து இறந்துபோன மூன்று ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும்.
+
Advertisement