சிதம்பரம், நவ. 7: சிதம்பரம் பாலமான் கரை அம்பேத்கர் நகரில் அகிலாண்டேஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயில் நிர்வாகியாக அதே பகுதியை சேர்ந்த வேலு மகன் தர்மதுரை (32), என்பவர் உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர் ஒருவர் கோயிலின் உள்ளே சென்று உண்டியல், பித்தளை பொருட்கள், சூலம் உள்ளிட்டவை உடைத்து திருடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மர்ம நபரை பிடித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சிதம்பரம் பூதக்கேணி பகுதியைச் சேர்ந்த சாம்பசிவம் மகன் அசோக்குமார் என்கிற அப்துல்லா (44) என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து கோயிலில் திருட முயன்ற அசோக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
