கடலூர், அக். 7: கடலூர் முதுநகர் பழைய சுனாமி நகர் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது வீட்டின் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பெண்ணின் வீட்டின் எதிரே உள்ள மாடியில் நின்று வாலிபர் ஒருவர் பெண் குளிப்பதை எட்டிப் பார்த்துள்ளார். இதனைக் கண்ட அந்த பெண் கூச்சலிடவே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த கமல் (30) என்ற வாலிபர் பெண் குளிப்பதை எட்டிப் பார்த்தது தெரிய வந்தது. இதையடுத்து கமல் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement