புதுச்சேரி, அக். 7: புதுச்சேரி முருங்கப்பாக்கம் பேட் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (54). டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி, வேல்விழி என்ற மனைவியும், 16 வயதில் மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 4ம் தேதி சிறுவன், செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்துள்ளார். இதை பார்த்து அவரது தாயார் சிறுவனை கண்டித்துள்ளார். இதனால், சிறுவன் கோபித்துக்கொண்டு, அவரது தங்கையிடம், தான் வீட்டிலிருந்து செல்வதாக கூறியுள்ளார். பின்னர், வீட்டிலிருந்த ரூ.2 லட்சம் பணம், 14 பவுன் நகை மற்றும் 2 சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார். பின்னர், மறுநாள் காலை புகழேந்தி எழுந்து பார்த்தபோது, வீட்டில் சிறுவன், பணம், நகை மற்றும் இருசக்கர வாகனம் இல்லாதததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இச்சம்பவம் குறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து சிறுவனை தேடி வருகின்றனர்.
+
Advertisement