விழுப்புரம், ஆக. 5: விழுப்புரம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே தளவானூரை சேர்ந்தவர் வேலு மனைவி ராணி(52). ஆடு வளர்த்து வந்தார். இதனிடையே நேற்று முன்தினம் அவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று காணாமல்போனதால் அதை தேடி சென்றுள்ளார். அப்போது வாணி...
விழுப்புரம், ஆக. 5: விழுப்புரம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே தளவானூரை சேர்ந்தவர் வேலு மனைவி ராணி(52). ஆடு வளர்த்து வந்தார். இதனிடையே நேற்று முன்தினம் அவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று காணாமல்போனதால் அதை தேடி சென்றுள்ளார். அப்போது வாணி என்பவர் வீட்டின் அருகே ஒதுங்கி நின்றபோது மண்சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ராணி உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.