விழுப்புரம், ஆக.5: விழுப்புரம் அருகே ஆலம்பாடியை சேர்ந்தவர் சிவகுரு(49). இவர் விழுப்புரம் வனத்துறை அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய சகோதரி கலையரசி கனடா நாட்டில் வசித்து வருவதால் விழுப்புரம் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டை சிவகுரு கவனித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது முன்பக்க மரக்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த சிவகுரு, வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 2 கிராம் தங்க மோதிரம், 500 கிராம் வெள்ளிப்பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிவகுரு அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+