மேல்மலையனூர், டிச.4: விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் மகா தீபத்தினை நோக்கி உற்றவர் அங்காளம்மன் தரிசனம் செய்தார். கார்த்திகை தீபத்தினை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்ட திருவண்ணாமலை அண்ணாமலையார் மகா தீபத்தினை காண பூசாரிகள் உற்சவர் அங்காளம்மனை வழக்கப்படி தோளில் சுமந்து மேற்கு வாயிலில் எழுந்தருளச் செய்தனர். அங்கே அங்காளம்மனுக்கு தீபா ஆராதனை அர்ச்சனை நடைபெற்றது. தீபத்தினை காண எழுந்தருளிய அங்காளம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோயில் உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் கோயில் மேற்பார்வையாளர் பாக்கியலட்சுமி, ஆய்வாளர் சங்கீதா, மேலாளர் சதீஷ், காசாளர் மணி, உள்துறை மணியம் குமார் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
+
Advertisement

